ரோஹித் சர்மா ஸ்டாண்ட் ஆப் காமெடியனா போகலாம்! - ஆஸி முன்னாள் வீரர் கடும் விமர்சனம்!

Prasanth Karthick

திங்கள், 6 ஜனவரி 2025 (10:42 IST)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் குறித்து விமர்சித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சைமன் கேட்டிச்சின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணியை ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

 

இந்த தொடரில் முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக அணியை வழிநடத்தி வெற்றி பெற செய்தார். ஆனால் அடுத்த 3 போட்டிகளில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 2 தோல்விகள், 1 ட்ராவை பெற்றது. மேலும் ரோஹித் சர்மாவும் தொடர்ந்து சொற்ப ரன்களில் அவுட் ஆனார்.

 

ரோஹித் சர்மாவின் தற்போதைய நிலை குறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் சைமன் கேட்டிச் “ரோஹித் சர்மா இன்னும் ரன்கள் எடுக்கும் பசியுடந்தான் விளையாட போகிறாரா? என்பது அவருக்குதான் தெரியும். அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அவர் விளையாடுவது என்பது எளிமையானது அல்ல.

 

இங்கிலாந்து அணியிலும் அட்கின்சன், பிரைடல் கார்ஸ் உள்ளிட்ட சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே என்னை பொறுத்தவரை ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாட நினைத்தால் அது அவரது கெரியரில் கடினமான தோல்வியாக அமையும். ரோகித் சர்மா பேசுவதை வைத்து பார்க்கும்போது ஓய்வு பெற்ற பின் அவர் ஸ்டாண்ட் அப் காமெடியனாக செல்லலாம்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்