இந்நிலையில் இதுகுறித்து டிராவிட் கூறுகையில், ரவி சாஸ்திரி அணியின் இயக்குனராக சிறந்து விளங்குகிறார். மேலும் காலத்திற்கேற்ற நவீன கிரிக்கெட் யுக்திகளின் மாஸ்டர் ஆவார். அணியில் இருக்கும் அனைத்து வீரர்களிடமும் இயல்பாக நடந்து கொள்வார். இவர் தலைமையிலான இந்திய அணி மேலும் சிறந்து விளங்கும் என்று டிராவிட் கூறியுள்ளார்.