மழையால் நிறுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா போட்டி… விளையாடும் மழை!

வியாழன், 3 நவம்பர் 2022 (16:20 IST)
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் அகமது மற்றும் சதாப் கான் இருவரும் அரைசதம் அடித்தனர். குறிப்பாக சதாப் கான் அபாரமாக விளையாடி 22 பந்துகளில் அரைசதமடித்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி பேட் செய்து கொண்டிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்கா 9 ஓவர்கள் முடிவில் 64 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்துள்ளது. மழை விடாமல் போட்டி கைவிடப்படுமானால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஏனென்றால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் பின் தங்கி உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்