திறமை இருந்தும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிருத்வி ஷா இந்திய அணியில் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுகிறார். சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா இந்திய அணியில் எடுக்கும் போது சொதப்புகிறார். அதே போல ஐபிஎல் போட்டிகளிலும் பிரித்வி ஷா சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்த தவறிவருகிறார்.
இதையடுத்து பிரித்வி ஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ சொல்லுங்கள் கடவுளே… நான் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும். 65 இன்னிங்ஸ்.. 3399 ரன்கள்.. சராசரியாக 55.77… இவையெல்லாம் இருந்தும் போதவில்லையா?.. ஆனாலும் நான் உன் மேல் நம்பிக்கை வைப்பேன். என் மேல் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஏனென்றால் நான் கண்டிப்பாக திரும்பி வருவேன். ஓம் சாய் ராம்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.