இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இதற்காக ஆஸ்திரேலியா சென்று பயிற்சி பெற்றுவரும் நிலையில் இந்தியாவில் அவரது முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்சனைக் காரணமாக மரணமடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பயோ பபுளில் சிராஜ் இருக்கும் நிலையில் அவரை இந்தியா அனுப்ப கிரிக்கெட் வாரியம் தயாராக இருந்தும் முகமது சிராஜ் அங்கேயே இருக்க முடிவு செய்தார்.