இந்த தோல்விக்கு இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம்தான் முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாது. அதிலும் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய பேட்டிங் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் ஓய்வு பெறவேண்டுமென ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் சொதப்பல்கள் குறித்துப் பேசியுள்ளார். அதில் “ரோஹித் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். அதனால் கடைசி போட்டி அவருக்கு மிகவும் முக்கியமானதாகும். கோலியைப் பொறுத்தவரை ஒரே தவறை அவர் திரும்ப திரும்ப செய்து வருகிறார். ஸ்விங் பாலை எதிர்கொள்ளும் போது அவர் கிரீஸுக்கு வெளியே நிற்கிறார். ஆனால் ஸ்விங் பாலை சிறப்பாக ஆடவேண்டும் என்றால் க்ரீஸ் உள்ளே நின்று ஆடவேண்டும்” எனக் கூறியுள்ளார்.