வாழ்க்கை ஒரு வட்டம்.. முதலிடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்தில்! ஆஸ்திரேலியா முதல் இடத்தில்..!

Prasanth Karthick

ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (13:20 IST)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் பெர்த் டெஸ்ட்டில் ரோஹித் சர்மா இல்லாததால் பும்ரா தலைமையில் அணி விளையாடினாலும் வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தும் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

 

அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாளில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை அடித்து குவித்தது.

 

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு வெறும் 19 ரன்கள்தான் என்று ஆனது. அதை ஆஸ்திரேலியா எளிதாக அடித்து வெற்றி பெற்றுள்ளது. இதனால் ரோஹித் சர்மாவின் கேப்பிட்டன்சி ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தகுதி பெற இந்திய அணி இந்த டெஸ்ட்டின் 5 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. முதல் டெஸ்ட் வெற்றியால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது. ஆனால் இந்த இரண்டாவது டெஸ்ட் தோல்வியால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

அதேசமயம் 3வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி இந்த ஒரு போட்டியின் வெற்றி மூலமாக நேரடியாக முதல் இடத்திற்கு சென்றுள்ளது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே தரவரிசையின் 1 மற்றும் 3வது இடத்திற்கான போட்டியாக மாறியுள்ளது இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர். இதற்கிடையே தென்னாப்பிரிக்கா எந்த சத்தமும் இல்லாமல் அதன் 2வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்