இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, சற்று முன் வரை 75 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. கான்வே 76 ரன்கள் எடுத்தார் என்பதும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வாஷிங்டன் சுந்தர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில், இன்றைய டெஸ்டில் இரண்டாவது விக்கெட்டை அஸ்வின் எடுத்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பட்டியலில், முதல் இடத்தில் அஸ்வின் உள்ளார்.