நேற்று பெங்களூருவில் நடந்த இரண்டாவது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. ரஜத் படிதார் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். அந்த அணியின் கோலி, ரஜத் படிதார், வில் ஜாக்ஸ் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில் கோலி 13 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த போது தனது பள்ளிக்கால நண்பரான இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இஷாந்த் ஷர்மா அவரை கேலி செய்யும் விதமாக அவரை தொடர்ந்து சென்று அவரை இடித்து ஸ்லெட்ஜ் செய்தார். அதை கோலி தலைகுணிந்து சிரித்தவாறே ரசித்து சென்றார். கோலி அவுட் ஆவதற்கு முன்பாக அந்த ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடித்து இஷாந்த ஷர்மாவிடம் ஏதோ கேலியாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.