ஏற்கனவே முதல் மேட்சில் தோற்ற வெறியுடன் ஆடிய மும்பை இந்தியன் அதிரடியாக ஆடியது. ரோஹித் சர்மா 54 பந்தில் 80 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்திக் பாண்டியா - 18(13) அவுட் ஆனார். எனவே மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.