ஐபிஎல்-2020; ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
சனி, 31 அக்டோபர் 2020 (23:25 IST)
ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஷார்ஜாவில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபத் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 120 ரன்கள் எடுத்து, 121 ரன்களை ஐதராபாத் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து, விளையாடிய ஐதராபாத் 14.1 ஓவரில் 5 விக்கெ இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து, அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெற்றி பெற்றது. இருப்பினும் பஞ்சாப்பை விட குறைவான ரன்ரேட் உள்ளதுதான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டியில் வெற்றதன் மூலம் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.