இந்நிலையில் இந்திய அணி தொடர்ந்து 13 போட்டிகளில் வென்று சாதனைப் படைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது. இதுவரை இந்திய அணி 17 டி 20 போட்டிகளில் 2022 ஆம் ஆண்டில் விளையாடியுள்ளது. அதில் ரோஹித் ஷர்மா இடம்பெற்றிருந்த 11 போட்டிகளில் வெற்றியும், அவர் விளையாடாத 6 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.