ஐசிசியின் மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகள் 2022ம் ஆண்டு நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறாததால் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதனால் கிரிக்கெட் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்வதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.