கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்ட போதும், ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடாமல் ஏமாற்றினார். அதன் பின்னர் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையியில் இப்போது சி எஸ் கே அணியின் கேப்டன் ருத்துராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினேஷ் கார்த்திக்கை குறிப்பிட்டு “ அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்காக விளையாடப் போகிறீர்களா?” எனக் கேட்டிருந்தார். அதற்கு தினேஷ் கார்த்திக் “அணியில் என்ன ரோல் என்ன கேப்டன்?” என பதில் கேள்வி கேட்டுள்ளார்.