இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய அனிமல் திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மோட்டாரட் என்ற இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு தோனி முதலீடு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விளம்பரத்தில் தோனி, அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் நடித்த கெட்டப்பில் நடித்துள்ளார் என்பதுதான் விளம்பரம் அதிக கவனம் பெற காரணமாக அமைந்துள்ளது.