ஆட்டநேர முடிவுக்குப் பின்னர் அஸ்வினுடன் பேசிய அனில் கும்ப்ளே “டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் 625 அல்லது 630 விக்கெட்களை வீழ்த்திய பிறகுதான் ஓய்வு பெறவேண்டும். உங்கள் சாதனை அதற்கு குறைவாக இருக்கக் கூடாது” என கோரிக்கை வைத்துள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.