அப்போது மைதானத்துக்கு வந்திருந்த சர்பராஸ் கான் தந்தை நௌஷத் கான் அணிந்திருந்த டிஷர்ட்டில் வாசகம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அவரது டிஷர்ட் பின்புறத்தில் “கிரிக்கெட் ஜெண்டில்மேன்களின் விளையாட்டு அல்ல. அனைவருக்குமான விளையாட்டு என எழுதப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொருளாராத ரீதியில் பின்தங்கி இருந்த குடும்பத்தில் பிறந்த சர்பராஸ் கானை வளர்த்து ஆளாக்கி இந்திய அணிக்காக விளையாட வைத்துள்ள நௌஷத் கானுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.