சூர்ப்பனகை பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

செவ்வாய், 3 மார்ச் 2020 (17:58 IST)
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கெசாண்ட்ரா. அதன்பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா, நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவார்பட்டி சிங்கம், மாநகரம் , மிஸ்டர் சந்திரமெளலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். 
 
இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் ஷெல்லி சோப்ரா தர் இயக்கத்தில் அனில் கபூர், சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள 'எக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா' படத்தில் ரெஜினா நடித்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது நடிகை ரெஜினா சூர்ப்பனகை என்ற புது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  கார்த்திக் ராஜு இயக்கம் இப்படம் ராமாயணத்தில் வரும் ராவணனின் தங்கையின் பெயர் சூர்ப்பணகை என்பதை குறிப்பிட்டு உருவாகி வருகிறது. இப்படம் தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. 
 

Terrific

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்