எந்த இடத்தில் இருந்து பயணத்தை தொடங்க வேண்டுமோ அந்த இடத்தில் இருந்து டிக்கெட் வாங்கிய 3 மணி நேரத்தில் பயணத்தை தொடங்கி விட வேண்டும் அல்லது நீங்கள் போக வேண்டிய இடத்துக்கான முதல் ரெயிலில் பயணத்தை தொடங்கி விட வேண்டும். இவ்விரண்டில் எது தாமதமாக நேருகிறதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 199 கி.மீ., தொலைவிலான இடத்துக்கு சென்று விட்டு, அங்கிருந்து திரும்பி வருவதற்கு முன்கூட்டியே டிக்கெட் பெறும் முறை வாபஸ் ஆகிறது. இந்த புதிய விதிமுறைகள் மார்ச் 1ம் தேதி அமலுக்கு வருகிறது.