பெண்கள் அமைச்சகத்தை மத கட்டுப்பாடுகளை வலியுறுத்தும் அமைப்பாக மாற்றிய தாலிபன்கள்

சனி, 18 செப்டம்பர் 2021 (09:56 IST)
ஆப்கானிஸ்தானில் பெண்கள் விவகாரத் துறை அமைச்சகத்தின் பலகையை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மத கோட்பாடுகளை வலியுறுத்தும் அமைப்பின் பலகையை தாலிபன்கள் வைத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இந்த பெயர் பலகை மாற்றங்கள் நடந்திருக்கின்றன. சமூக வலைத்தளங்களில், அவ்வமைச்சகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களை வேலை பார்க்க விடும்படி தாலிபன்களிடம் கோரும் காணொளிகளைக் காணமுடிகிறது.
 
1990களில் கடுமையான இஸ்லாமிய கோட்பாடுகள் மற்றும் பெண்கள் மீதான கட்டுபாடுகளை இதே அமைச்சகம் தான் செயல்படுத்திவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் பெண்கள் போராடி பல அடிப்படை உரிமைகளைப் பெற்றுள்ளனர். 
 
தற்போது அதிகாரத்தைக் கைப்பாற்றி இருக்கும் தாலிபன்களின் ஆட்சியில் தங்களின் உரிமைகள் பாதிக்கப்படுமோ என பெண்கள் அச்சத்தில் உள்ளனர். ஆப்கன் மாறிவிட்டது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என உறுதியளித்தனர், ஆனால் கொள்கைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது என பிபிசியின் முதன்மை சர்வதேச செய்தியாளர் லைஸ் டாசெட் கூறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்