தாலிபன் ஆட்சிக்கு 3.10 கோடி டாலர் மதிப்பிலான உதவிகள் - சீனா அறிவிப்பு!

வியாழன், 9 செப்டம்பர் 2021 (14:32 IST)
ஆப்கானிஸ்தானுக்கு 3.10 கோடி டாலர் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படும் என சீனா அரசு அறிவித்துள்ளது. 
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக முல்லா ஹஸன் அகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாலிபன்கள் தங்கள் இடைக்கால அமைச்சரவையை அறிவித்தனர். 
 
ஆப்கானில் தாலிபன்கள் ஆட்சி செய்ய துவங்கியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு 3.10 கோடி டாலர் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படும் என சீனா அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஆப்கன் மக்களுக்கு உணவு, குளிர்காலத்தை சமாளிக்கும் பொருட்கள், தடுப்பூசிகள், மருந்துகள் போன்றவை தலிபான் அரசிடம் வழங்கப்படுமாம். 
 
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள ஆப்கானிஸ்தானுக்கு முதல்கட்டமாக 30 லட்சம் தடுப்பூசிகளை சீனா விரைவில் வழங்கும் என உறுதிப்பட கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்