பொதுவாக காப்பர் டி என அறியப்படும் கருத்தடை சாதனம், பெண்கள் கர்ப்பமடையாமல் தடுக்க கருப்பையில் செலுத்தப்படும் T வடிவ கருவியாகும். தம்பதிகள் வாழ்வின் ஒரு கட்டத்தில் கருத்தடையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலுக்கு வர நேரிடும்.
இந்த வகையில் தம்பதிகள் மூன்று பிரிவுகளாக உள்ளனர். முதல் பிரிவில் உள்ளவர்கள் திருமணம் ஆன உடனே குழந்தை பெற விரும்பாமல், குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட விரும்புகின்றவர்கள். இரண்டாம் பிரிவில் உள்ளவர்கள் முதல் குழந்தை பிறந்த பிறகு இரண்டாம் குழந்தைக்கான திட்டமிடுதலைத் தாமதப்படுத்த விரும்புகின்றவர்கள். மூன்றாம் பிரிவில் உள்ளவர்கள் இரண்டு குழந்தை பிறந்த பிறகு நிரந்தர அல்லது தற்காலிக கருத்தடையை நாடுகின்றவர்கள்.
இந்த ‘காப்பர் டி’ கருத்தடை சாதனம் செம்பில் ஆனது. இது டி வடிவத்தில் காணப்படும். இந்த சாதனத்தின் கீழ்ப்புறத்தில் நூல் மாதிரி அமைப்பு காணப்படும்.இந்த நூல் போன்ற அமைப்பானது இந்த காப்பர் டி-யை வெளியே எடுக்க உதவுகின்றது. இந்த காப்பர் டி ஆனது பெண்ணின் கர்ப்பப்பையில் மருத்துவர்களால் பொருத்தப்படும். ஆகப் பெண்ணின் கருப்பையில் உள்ள இந்த காப்பர் டி கருத்தரித்தல் ஏற்படாமல் தடை செய்யும்.