பர்வதாசனம் செய்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்!

யோக கலையால் உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வர பெரும் பங்கு  வகிக்கிறது.

 
யோகாசனம், தியானம், மூச்சுப்பயற்சி இவைகளை எப்போதும் கிழக்கு முகம் பார்த்தோ, அல்லது வடக்கு முகம் பார்த்தோ பயிற்சி செய்தல் நல்லது. பருத்தி துணியாலான உடைகளை அணிவது நல்லது.உடலை மிகவும் இறுக்கி, ஆசனங்கள் செய்யும் பொழுது அழுத்தி வலிப்பதாக இருக்கக்கூடாது. அதுபோலவே உள்ளாடைகள் மிகவும் தொளதொளவென்றும் இருக்கக்கூடாது.
 
நேரமில்லாமல் வருந்துபவர்கள், காலை நேரத்தில் தியானம், மூச்சுப்பயற்சி செய்துவிட்டு, மாலை நேரத்தில் யோகாசனப்  பயிற்சியையும் செய்யலாம்.
 
செய்யும் முறை:
 
விரிப்பில் கவிழ்ந்து படுக்கவும். கைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும். 
 
உள்ளங்கை பகுதியினையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கிய படி முக்கோண  வடிவத்தில் படத்தில் உள்ளபடி உயர்த்தவும். 
 
பின் தலையினை இரு கைகளுக்கிடையே தொங்க விடவும். இப்படி 20 வினாடிகள் இருந்து பின் நிதானமாக உடலை பழைய  கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யவும்.
 
இரத்த அழுத்தம் உள்ளவர்களும், ஒரு தலைவலி, கண் நீர் முட்டல் போன்ற கண் நோய் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை  செய்யக் கூடாது.
 
பலன்கள்:
 
தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக அமையும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.  கண்பார்வை சீராகும். கை, கால்களின் மூட்டு பலனடையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்