தொப்பையை குறைத்திட உதவும் பாதஹஸ்தாசனம்...!!

தொப்பை வயிற்றை கொண்டவர்கள், நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்த பாதஹஸ்தாசனம் ஒரு சிறந்த வரப்பிரசாதம். இவை கணையத்தை ஒழுங்காக இயங்கச் செய்து தொந்தியை குறைத்து டயாபடீஸ் வராமல் தடுத்து உங்களை இளமையாக சுறுசுறுப்பாக வாழ வைக்கும்.
பாதஹஸ்தாசனம் செய்முறை:
 
விரிப்பில் கிழக்கு நோக்கி நிற்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். இரு கைகளையும் தலைக்கு மேல உயர்த்தவும். மூச்சை வெளியில் விட்டு கொண்டே கீழே குனிந்து கால் விரலை தொடுவதற்கு முயற்சி செய்யவும். இந்த நிலையில் சாதாரணமாக மூச்சு  விட்டு கொண்டே இருபது வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இதே போல் மூன்று முறை  செய்யவும்.
 
இதை யாரெல்லாம் செய்யக்கூடாது: அடிமுதுகு வலி அதிகம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். முதுகெலும்பில் டிஸ்லொகேட் ஆகியிருந்தாலும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்களும் இந்த ஆசனத்தை செய்ய  வேண்டாம். 
 
நீரிழிவு உள்ளவர்கள் அவசர படாமல் நிதானமாக பயிற்சி செய்யுங்கள். முதல் நாளிலேயே முழுமையான நிலை வராது. தொடர்ந்து பல மாதங்கள் பயிற்சி செய்த பின்னர் தான் உடலில் வளையும் தன்மை கிடைக்கும். ஆனால், நீங்கள் குனிந்து காலை தொட முயற்சி செய்யும்  போது வயிற்றின் உள்பகுதி அமுக்கப்படும். இதனால் கணையம் ஒழுங்காக சுரக்கும். நீரிழிவிலிருந்து நிச்சயம் விடுதலை ஆகிவிடுவீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்