’வசூல் ராஜா ’ சினிமா போல் 'ஆடுகளை கட்டிப் பிடித்த இளைஞர்'... வைரல் வீடியோ!
சனி, 16 நவம்பர் 2019 (20:42 IST)
நாள்தோறும் சமூக வலைதளங்களில் புதுப்புது விஷயங்கள், விளையாட்டுகள் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் ’லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக ’ எல்லோரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள டிக் டாக் இன்று செல்போனில் பயன்படுத்தாதவர்களே இல்லை.
அந்த வகையில், நம்மூரில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் இந்த டிக் டாக் பிரபலபாகியுள்ளது.
இந்நிலையில், ஒரு இளைஞர் தான் வளர்ந்து வரும் ஆடுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆரத்தழுவுவதுபோல் அதை தன் மார்புடன் வைத்து தட்டிக் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
அவர் ஒவ்வொரு ஆடுகளை கையில் எடுத்து தூக்கும் போது, மற்ற ஆடுகள் ஒவ்வொன்றும் அவரது கால்களில் தொற்றிக்கொண்டு தூக்கும்படி சொல்லதுபோன்று நிற்கிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. எல்லோரும் அந்த இளைஞரை பாராட்டி வருகின்றனர்.