அப்போது காவல் நிலையத்துக்குச் செல்லும் வழியிலேயே அந்த இளைஞரை ஒரு தூணில் கட்டி வைத்த போலீஸார், தாங்கள் அணிந்திருந்த தோல் பெல்டால் மனிதாபிமானம் இல்லாமல் அவரை பலமாகத் தாக்கினர். வலி தாங்க முடியாமல் இளைஞர் அழுது கதறினார். இதை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.