”நீ எனது கண்ணின் மணி; எனது இறப்பிற்கு பின் மறுமணம் செய்துகொள்” - மனைவிக்கு பின் லேடன் கடிதம்

வியாழன், 21 மே 2015 (18:29 IST)
நீயே எனது கண்ணின் மணி; எனது இறப்பிற்கு பின் நீ மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஒசாமா பின் லேடன் தனது மனைவிக்கு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
 
கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி நடைபெற்ற அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் அல் கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன். இதனால் அவரை நீண்ட காலமாக அமெரிக்க ராணுவம் தேடி வந்தது.
 

 
இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி ஒசாமா பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து 61 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அபோதாபாத் என்ற நகரத்தில் கொல்லப்பட்டார்.
 
தற்போது, ஒசாமா பின் லேடன் தங்கியிருந்த வீட்டிலிருந்து அமெரிக்க ராணுவத்தினர் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அந்த ஆவணங்களில் பின் லேடன் தனது மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தையும் ராணுவத்தினர் வெளியிட்டனர்.
 
அந்த கடிதத்தில் பின் லேடன், “நீயே எனது கண்ணின் மணியாக இருப்பவள். மேலும், நான் இந்த உலகத்தில் பெற்றவற்றுள் எல்லாவற்றையும் விட, நீ விலை மதிப்பற்றவள். நீ இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால், சொர்க்கத்திலும் நீ என் மனைவியாக இருக்க வேண்டும் என உண்மையாகவே விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்