உலகின் இடைவிடாது நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்

திங்கள், 6 பிப்ரவரி 2017 (19:17 IST)
தொரச்சியாக நீண்ட தூரம் பயணிக்கும் விமானம், கத்தார் - நியூசிலாந்து இடையே பயணிக்கிறது. இந்த விமானம் நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் இன்று தரையிறங்கியது.


 


கத்தார் தலைவர் தேகாவில் இருந்து நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்து வரை செல்லும் விமான, இடையில் எங்கும் தரையிரங்காமல் நீண்ட தூரம் பயணம் செய்கிறது. இதுவே நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய உலகின் முதல் விமானம். இந்த விமானம் தொடர்ச்சியாக 16 மணி நேரம் 23 நிமிடத்தில் 14,535 கி.மீ தூரம் பயணயம் செய்கிறது.

இது போயிங் ரக விமானம். இந்த விமானம் 4 விமானிகள் மற்றும் 15 விமான பயணியாளர்களை கொண்டுள்ளது. இதற்கு முன் டெல்லி டூ சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் தான் நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய விமானமாக இருந்தது. ஆனால் தற்போது புவியின் மேற்பரப்பு கணக்கீடு படி இந்த கத்தார் ஏர்வேஸ் விமானம் நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய விமானம்.

வெப்துனியாவைப் படிக்கவும்