உலகம் முழுவதும் காற்று மாசுபாடு இயற்கை மாசுபாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதிகமான தொழிற்சாலைகள், வாகன புகை ஆகியவற்றால் பல முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மிகவும் குறைந்து சுவாசிக்க உகந்ததாக இல்லை என தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் சுற்றுசூழல் பாதுகாப்பு கழகம் நடத்திய ஆய்வில் உலகில் அதிகமான காற்று மாசுள்ள நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் 10 இடங்களுக்குள் ஆசிய நாடுகளே அதிகமாக இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், இந்தியாவில் டெல்லி, வங்கதேசத்தில் டாக்கா, கிர்கிஸ்தானில் பிஷெக் ஆகிய பகுதிகள் காற்று மாசுபாட்டில் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.