நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது நிறுத்தம்! – உலக நாடுகள் கையெழுத்து!

வெள்ளி, 5 நவம்பர் 2021 (14:35 IST)
நிலக்கரி மூலமாக மின்சாரம் தயாரிப்பதை நிறுத்துவதாக கிளாஸ்கோ உலக மாநாட்டில் உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து க்ளாஸ்கோ பருவநிலை மாநாட்டை நடத்தி வருகின்றன. இதில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மாநாட்டில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்துவதாக ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் மீது 40க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இதில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கையெழுத்திடவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்