உலக அளவில் கொரோனா: பாதிப்பு 5,89,67,519, குணமானோர் 4,07,56,269!

திங்கள், 23 நவம்பர் 2020 (06:55 IST)
உலகில் கொரோனா தொற்றால் 5,89,67,519 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 4,07,56,269  பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 13,93,193 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், தற்போது உலக அளவில் ஆக்டிவ் கேஸ்கள் 16,817,766 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 134,237 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது என்பதும், இந்தியாவில் கொரோனா தொற்றால் 44,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 262,694 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 169,197 பேரும், இந்தியாவில் 133,773 பேரும் மரணம் அடைந்துள்ளனர்
 
கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 28,337 பேருக்கும், ரஷ்யாவில் 24,581 பேருக்கும் கொரோனா கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் உலகிலேயே கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 864 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இத்தாலியில் 562 பேரும், மெக்ஸிகோவில் 550 பேரும் கொரோனாவால் ஒரே நாளில் பலியாகியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்