இந்நிலையில், இப்படி சுலபமாக பணம் சம்பாதிப்பதற்காகவும், போக்கிமோன் விளையாட்டின்மீது ஏற்பட்டுள்ள அதீத ஈடுபாட்டாலும் லண்டன் நகரை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவர் மாதம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதித்துவந்த தனது ஆசிரியை வேலையை தற்போது துறந்துள்ளார்.
வடக்கு லண்டனில் உள்ள ஹை பார்னெட் பகுதியை சேர்ந்த சோபியா பெட்ரெஸா(26) என்னும் அந்தப் பெண், போக்கிமோன் மூலம் அதிக பாயின்ட்களை சம்பாதித்து பெரிய லெவலுக்கு போன பின்னர் தனது கணக்கை வேறொருவருக்கு விற்பதன் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரி ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையுள்ளதாக கூறுகிறார்.