நான்கு மாதங்களாக இறந்த கணவருக்கு புனித நீர் தெளித்து வந்த மருத்துவர்
வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (21:20 IST)
ரஷ்யாவை சேர்ந்தவர் 76 வயதான ஓய்வு பெற்ற பெண் மருத்துவர், நான்கு மாதங்களாக இறந்து போன அவரது கணவருக்கு புனித நீர் தெளித்து பிரார்த்தனை செய்து வந்துள்ளார்.
மீண்டும் கணவர் உயிர்பிழைத்து வருவார் என்ற நம்பிக்கையில், அவர் மீது புனித நீரை தெளித்து பல்வேறு மந்திரங்களையும் கூறியுள்ளார். சமீபநாட்களாக மிக கடுமையான துர்நாற்றம் வந்ததை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில் அதிகாரிகள் விரைந்து வந்த உடலை கைப்பற்றி அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.