அக்டோபர் மாதம் தென்கொரியா செல்லும் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங்கை சமாதானம் செய்ய முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அதிகமான வரிகளை விதித்த நிலையில், சமீபமாக ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து நட்பு பாராட்டி வருவது அமெரிக்காவை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து அமெரிக்காவின் நெருக்கடிகளை தாண்டி சீனா தனது வர்த்தக உறவை பிற நாடுகளுடன் மேம்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில்தான், ட்ரம்ப்பின் தென்கொரிய பயணம் கவனம் பெற்றுள்ளது. அக்டோபரில் தென்கொரியா செல்லும் ட்ரம்ப் அங்கு ஆசிய - பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்கிறார். இந்த மாநாட்டில் ஆசிய நாடுகள் - பசிபிக் நாடுகள் இடையேயான பொருளாதார சுமூக உறவை மேம்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் கலந்துக் கொள்ள உள்ள நிலையில், அவரோடு ட்ரம்ப் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Edit by Prasanth.K