உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
துவக்கம் முதலே உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் பொருளாதார தடையை விதித்ததற்காக ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தயார் எனவும் அமெரிக்காவில் உள்ள ரஷ்யாவின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் எனவும் அதிபர் ஜோ பைடன் அதிரடியாக தெரிவித்தார்.