இந்திய மாணவர்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளார்களா? – வெளியுறவுத்துறை விளக்கம்!

வியாழன், 3 மார்ச் 2022 (09:55 IST)
உக்ரைனில் போர் நடந்து வரும் கார்கிவ் பகுதியில் இந்திய மாணவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற மாணவர்கள் பலர் அங்கு சிக்கியுள்ளனர். மாணவர்கள் பலர் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து இந்திய அரசின் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இயக்கப்படும் விமானங்கள் வழியாக இந்தியா திரும்பி வருகின்றனர்.

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அங்கிருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி வெளியுறவு துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில் அதுகுறித்து கூறியுள்ள வெளியுறவு துறை, கார்கிவ் பகுதியில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டு விட்டனர். இந்திய மாணவர்கள் யாரும் கார்கிவ்வில் பணய கைதியாக பிடித்து வைக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்