கொரோனாவால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்கலாம்: WHO எச்சரிக்கை
வெள்ளி, 5 நவம்பர் 2021 (07:38 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் உயிரிழப்புகளும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதக தளர்வுகள் மற்றும் தடுப்பூசி இன்மையால் கொரோனா பாதிப்புக்கு வாய்ப்பு அதிகம் என உலக சுகாதார மையம் எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது