மேற்கு ஆப்பிரிக்காவில் புதிய ஆட்கொல்லி வைரஸ்! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
புதன், 11 ஆகஸ்ட் 2021 (09:27 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரஸ் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொடிய வைரஸ் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்பர்க் என்ற இந்த வைரஸ் வௌவால்கள் மூலம் பரவுவதாகவும், இது மனிதர்களிடையே வேகமாக பரவுவதாகவும், இந்த நோய் 88 சதவீதம் இறப்பு விகிதத்தை கொண்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.