பூஸ்டர் தடுப்பூசி தேவையா? உலக சுகாதார மையம் இன்று ஆலோசனை!

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:37 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கொரோனா வைரசை விட அதிக வலிமைமிக்க ஒமிக்ரான் வைரஸ் தற்போது பரவி வருவதை அடுத்து ஏற்கனவே போட்டு உள்ள தடுப்பூசிகள் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
இதனை அடுத்து ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிக்கப்படாமல் இருக்க பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று ஆலோசனை நடந்து வருகிறது
 
இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி போடுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் இன்று ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் பூஸ்டர் தடுப்பூசி தேவையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்