ட்ரம்ப் சொன்னா மட்டும் போதாது; ஆதாரம் வேணும்! – உலக சுகாதார அமைப்பு!

செவ்வாய், 5 மே 2020 (13:05 IST)
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ட்ரம்ப் ஆதாரத்தை அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன. இந்நிலையில் சீனாவின் தவறான தகவல்களே உலகம் முழுவதும் கொரோனா பரவ காரணம் என்றும், உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அதிபர் ட்ரம்ப் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய ட்ரம்ப் சீனா  கொரோனா விவகாரத்தில் தவறு செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் அதை வெளியிடுவதாகவும் பேசியுள்ளார். சீனா மீதான ட்ரம்ப்பின் இந்த தொடர் குற்றச்சாட்டு உலகளாவிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதுபற்றி பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர், இதுவரை சீனாவுக்கு எதிரான ஆதாரங்கள் எதையும் அமெரிக்க அதிபர் தங்களிடம் அளிக்கவில்லை என்றும், ஆதாரமில்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்