இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படுபவர் ,கடந்த 1993 ஆம் ஆண்டில் மும்பை தொடர்குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக இந்திய போலீஸாரல் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடப்பட்டு வருபவர் நிழலுலக தாதா தாவுத் இப்ராகிம். இதுவரை இவரைப்பிடிக்க முடியவில்லை.உலகில் எங்கேயோ ஒளிந்து கொண்டு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார் என நினைத்தாலும் உளவுத்துறையும் அவ்வப்போது சில தகவல்களை இந்திய அரசுக்கு சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது.