என்ன ஆனார் ராட்சத காற்றாடி கயிற்றுடன் ஆகாயத்தில் மிதந்த நபர்?

புதன், 22 டிசம்பர் 2021 (12:23 IST)
ராட்சத காற்றாடி கயிற்றுடன் ஆகாயத்தில் மிதந்த இளைஞருக்கு கீழே விழுந்து முதுகுத் தண்டு பாதிப்பு.

 
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் இளைஞர்கள் சிலர் இணைந்து ராட்சத பட்டம் ஒன்றை தயாரித்துள்ளனர். அதை பறக்கவிட காற்று நன்றாக வீசும் பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கு பல இளைஞர்கள் சேர்ந்து பட்டத்தின் கயிற்றை விடுவித்தபோது ஒருவர் மட்டும் அதை பிடித்துக் கொண்டிருந்துள்ளார்.
 
பட்டம் மேலெழும் போது அதன் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், சிறிது சிறிதாக கயிற்றை விட வேண்டும் என்பது தெரியாமல், காற்றாடியின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டிருக்க, அவர் பட்டத்துடன் மேலெழத் தொடங்கினார். இப்படி ஆகாயத்தில் கயிற்றைப் பிடித்தவாறு உயரத் தொடங்கிய மனோகரன், சுமார் 120 அடி வரை தான் கயிற்றுடன் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்ததார். 
 
பின்னர் மெல்ல மெல்ல உயரம் குறைய சுமார் 30 அடி உயரத்தில் இருந்த நிலையில் தான் பிடித்திருந்த கயிற்றை கைவிட்டு கீழே குதித்துள்ளார். இதன்போது முதுகுத் தண்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்