எல்லையில் படை எண்ணிக்கையை அதிகரித்த சீனா: போர் பயமா? போருக்கான வியூகமா?

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (21:06 IST)
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 


 
 
இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து உள்ளன. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், மேலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 80 கூடாரங்களை சீன ராணுவம் தற்காலிகமாக அமைத்து உள்ளது. 800 படை வீரர்களை நிறுத்தி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
சிக்கிமில் இந்திய பகுதியில் இந்திய ராணுவம் 350 படை வீரர்களை நிறுத்தியுள்ளது. இதற்கிடையே டோக்லாம் அருகே உள்ள கிராம மக்களாஇ வெளியேறுமாறு இந்திய ராணுவம் உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்