இந்தியாவிலும் பிகினி விமான பணிப்பெண்களா?

ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (17:08 IST)
வியட்நாம் நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்று வியட்ஜெட். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் விமான சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒருசில வழித்தடங்களில் பயணம் செய்யும் விமானங்களில் மட்டும் பிகினி உடை அணிந்திருக்கும் விமான பணிப்பெண்களை அமர்த்தியுள்ளது
 
 
இதனால் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாகி இந்த விமான நிறுவனத்தின் உரிமையாளர் வியட்நாம் நாட்டின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகிவிட்டார். இதனையடுத்து வரும் டிசம்பர் மாதம் முதல் டெல்லி முதல் வியட்நாம் வரை செல்லும் புதிய சேவையை வியட்ஜெட் நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளது. தொடக்க கால சலுகையாக வெறும் ரூ.9க்கு டெல்லியில் இருந்து வியட்நாம் செல்லலாம் என்றும் அறிவித்துள்ளது. 
 
 
ஏற்கனவே விரைவில் டெல்லி-வியட்நாம் விமான சேவையை ஏர்ஜெட் நிறுவனம் தொடங்கவிருக்கும் நிலையில் தற்போது வியட்ஜெட் நிறுவனமும் அதே சேவையை ஆரம்பித்துள்ளதால் இரு நிறுவனங்களுக்கும் கடும் போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருசில வழித்தடங்களில் பிகினி பெண்களை விமான பணிப்பெண்களாக பயன்படுத்தி வரும் வியட்ஜெட் நிறுவனம் டெல்லி-வியட்நாம் விமானங்களுக்கும் பயன்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்