வாட்ஸ்அப், பேஸ்புக் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இந்தியர்களுக்கு ஃபேஸ்புக் அதிரடி பதில்

சனி, 29 ஏப்ரல் 2017 (06:12 IST)
ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு புதிய தனியுரிமை கொள்கைகளை மாற்றி அமைத்தது. இந்த கொள்கைகளை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.



 


இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றபோது, 'எங்கள் தனியுரிமை கொள்கைகள் பிடிக்காதவர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று பேஸ்புக் தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஃபேஸ்புக் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் மேலும் தனது வாதத்தில் கூறியபோது, 'பேஸ்புக் தனது பயனர்களை நிர்பந்திக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது பேஸ்புக் அக்கவுண்ட்டினை அழித்து விட்டு, வாட்ஸ்அப் சேவைகளையும் பயன்படுத்தாமல் இருக்கலாம்', என தெரிவித்தார்.

ஃபேஸ்புக்கின் இந்த பதில் இந்தியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உலகில் ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்று இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்