இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகளை திரும்ப கொடுத்த அமெரிக்கா

வியாழன், 6 செப்டம்பர் 2018 (20:16 IST)
இந்தியாவில் இருந்து திருடப்பட்டு அமெரிக்க அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு இருந்த 2 பழங்கால சிலைகள் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

 
இந்தியாவில் இருந்து தெய்வங்கள் மற்றும் பழமை காலத்து சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு விறபனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட இரண்டு சிலைகள் திருப்பி அளிக்கப்பட்டது.
 
இந்த இரண்டு சிலைகளும் அமெரிக்க அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகளை அமெரிக்காவுக்கான இந்தியாவின் உயர்தூதரான சந்தீப் சக்ரவர்த்தியிடம் வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்