என் முகத்தை தொடவே எனக்கு பயமா இருக்கு! – கிண்டல் செய்கிறாரா ட்ரம்ப்?
வெள்ளி, 6 மார்ச் 2020 (08:51 IST)
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் முகத்தை தொட்டுப்பார்க்கவே பயமாக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்காவின் இரண்டு மாகாணங்களில் கொரோனா பாதிப்பி அதிகமாக தென்படுவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்தும், மக்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து தருவது குறித்தும் அதிபர் ட்ரம்ப் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ட்ரம்ப் ”கொரோனா வைரஸ் அச்சத்தால் என் முகத்தை ஒரு வாரமாக நான் தொடவே இல்லை. அதை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்” என கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸை தீவிரமாக எதிர்கொண்டிருக்கும்போது இதுபோன்ற கிண்டல்கள் அவசியம்தானா? என சிலர் ட்ரம்பின் கிண்டலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.