அமெரிக்காவில் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த சட்ட மசோதா! – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

வெள்ளி, 10 ஜூன் 2022 (10:45 IST)
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 ஆசிரியர்கள் 19 மாணவர்கள் உள்ளிட்ட மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் நியூயார்க்கில் பப்பல்லோ நகரில் சூப்பர்மார்க்கெட்டில் ஒரு நபர் அங்கிருந்த மக்கள் 10 பேரை சுட்டுக் கொன்றார்.

அமெரிக்காவில் தொடரும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை அந்நாட்டு மக்களே கண்டித்து வரும் நிலையில், துப்பாக்கி பயன்பாட்டிற்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் கீழ்சபையில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட புதிய விதிகளுடன் கூடிய சட்ட மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

இதில் மசோதாவுக்கு ஆதரவாக 223 வாக்குகளும், எதிராக 204 ஓட்டுகளும் பதிவாகின. ஆதரவாக அதிகம் வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் இது அடுத்து செனட் சபை ஒப்புதலுக்கு செல்லும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்