யூனிசெப் தூதர் : நடிகையை நீக்க கோரிய பாகிஸ்தானின் முயற்சி தோல்வி

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (16:52 IST)
ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா பதவி விலக வேண்டும் என ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியது சமீபத்தில் பரப்பரபாக பேசப்பட்டது. இதுதொடர்பாக ஐநா பொதுச்செயலாளார் கூறியுள்ள பதில், பாகிஸ்தானின் முயற்சிக்கு  தோல்வி ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெண் குழந்தைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்தி, தேவையான ஊட்டச்சத்துகள், எய்ட்ஸ் நோய் ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூனிசெஃப் தொண்டாற்றி வருகிறது. இதன் உலகளாவிய நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் காஷ்மீரீன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை பிரியங்கா ஆதரித்தார் என்றும், மேலும் அவர் இந்தியா-பாகிஸ்தானின் இடையே பிரச்சனை எழும்போதெல்லாம் ஒரு தலைபட்சமாகவே செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆதலால் அவரை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரின் மசாரி, ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
புல்வாமா தாக்குதலின் போது இந்திய வீரர்களுக்கு ஆதரவாக பிரியங்கா சோப்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் “ஜெய் ஹிந்த்” என பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது
.
இதுதொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியா குத்ரெஸின் கூறியுள்ளதாவது :
 
'யூனிசெப் நல்லெண்ண தூதர்கள் தனிப்பட்ட திறனில் பேசுகின்றனர்.  எனவே அவர்களுக்கு ஆர்வமுள்ள அல்லது அவர்களுக்கு அக்கறை கொண்ட பிரச்சனைகளை குறித்து பேச அவர்களுக்கு உரிமை உண்டு. இப்படியிருக்க அவர்கள் தனிப்பட்ட கருத்துக்களை யுனிசெப்பின் கருத்துக்களாக பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் யூனிசெப்பின் சார்பாக பேசும் போது அவர்கள் யூனிசெப்பின் சார்பாக பேச வேண்டும், என நாங்கள் எதிர்பார்க்கிறோம் 'இவ்வாறு தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்