உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷ்யா, உக்ரைன் மீது ஹைப்பர் சோனிக் உள்ளிட்ட ஒலிவேக ஏவுகணைகளை கொண்டும் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதில் மிக குறிப்பாக உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் கடந்த சில நாட்களாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்யா. மருத்துவமனைகள், பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகள் என தாக்குதலால் மரியுபோலின் 90% கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது.
ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் சுமார் 140,000 பேர் மரியுபோலில் நகரத்தை விட்டு வெளியேறினர். சுமார் 160,000 பொதுமக்கள் இன்னும் மரியபோல் நகரத்தை விட்டு வெளியேராமல் சிக்கியுள்ளனர் என்று மேயர் அலுவலகம் அறிவித்துள்ளது.